வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்குத் தடை..! – வனத்துறை திடீர் அறிவிப்பு
வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவை காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழா காலங்களில் மலை ஏற வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழாக் காலங்கள் முடிவுற்ற நிலையல், தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் உலா வருவதால், அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் வெள்ளியங்கிரி மலை ஏற பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.