சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. செங்கல்பட்டில் பரபரப்பு
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில், மாணவர் விடுதியில் 60 பேர் பழைய விடுதியிலும், 60 பேர் புதிய விடுதியிலும் என 120 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். சட்டக்கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த சட்டக் கல்லூரியில் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி கவிப்பிரியா வயது 19 புதிய மாணவர் விடுதியில் இரண்டாவது மாடியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சக மாணவியர் பார்த்து கவிப்பிரியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடன் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் மன உளைச்சலுக்கு, குடும்பத்தில் ஏதேனும் தகராறா? காதல் விவகாரம் உள்ளதா என்ற கோணத்திலும், மாணவிகளிடம் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதாவது நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தொடர்ந்து மாணவியின் உடல்நிலை கவனித்து வருவதாக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது