பொது போக்குவரத்து சேவை வழமைக்கு…

நாடளாவிய ரீதியில் இன்று பொது போக்குவரத்து சேவை வழமையான நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 50 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி சேவையிலிருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை , ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி பல்வேறு தொழில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த 24 மணித்தியால அடையாள பணி புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.