மஹிந்த பதவி துறக்காவிடின் பிரேரணை மூலம் தூக்குவோம் அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. எச்சரிக்கை.

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே அவர் பதவி விலக நேரிடும்.”
இவ்வாறு அபே ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் நான் நினைக்கவில்லை.
பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்” – என்றார்.