மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால நிர்வாகம்.. கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவிப்பு
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக தேசிய சபையொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.