பாதயாத்திரை முடியும் போது சஜித் அனைத்தையும் இழப்பார்.. பசில் எதிர்க்கட்சித் தலைவர்..
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மற்றுமொரு பிரதமரை நியமித்தால், பசில் ராஜபக்ச நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கு தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது சமகி ஜன பலவெவ 40 ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பொதுஜன பெரமுன குழு அதிக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர முடியும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தமது எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் பசில் ராஜபக்சவின் அணி எதிர்க்கட்சியில் அமரப்போவது ஆகின இரண்டுமே திரிபுகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாச , தான் எதிர்கட்சி தலைவர் பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாகவும் , மக்கள் ஆதரவே தமக்கு போதும் எனவும் தெரிவித்துள்ளார்.