நாட்டிற்கு மேலும் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் பொருட்கள்….
இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இதன் மூலம் வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து பற்றாக்குறை எதிர்வரும் இரண்டு மாதங்களில் நிவர்த்தி செய்யப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.