பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணை அடுத்த வாரம்

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்து இடைக்கால அரசாங்கங்களையோ அல்லது சர்வகட்சி அரசாங்கங்களையோ அமைப்பதை விட மக்களை முன்னோக்கி நகர்த்தி மக்கள் ஆணையுடன் சட்டபூர்வமான அரசாங்கத்தை அமைப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமென அறியமுடிகிறது.
இதற்கு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரியவருகிறது.