அரசு , இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை கொண்டுவர உள்ளது! தோற்றால் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும்!

எதிர்வரும் காலங்களில் இடைத்தேர்தல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி , மொட்டு கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதியை ஒதுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும்.