AK 62 படத்தின் கதையம்சம் பற்றிய முக்கிய அப்டேட்டை கூறிய விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது அவரின் 61-வது படத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அவரின் 62 படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அப்படம் குறித்த பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் முதல்முறையாக AK 62 படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் “தனக்கு அஜித் சாரின் வாலி மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும், குறிப்பாக மங்காத்தா படத்தின் இன்டெர்வல் காட்சி, அவர் மட்டுமே அந்த சீன்னில் நடித்திருப்பார்.
AK 62 படத்தையும் அதேபோல தான் எடுக்க முயற்சி செய்வேன்” என பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.