ஜனாதிபதி சார்ந்த அரசும் மொட்டு! எதிர்க்கட்சித் தலைவரும் மொட்டு?
எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் அமருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துடன் அரசியல் களத்தில் மீண்டும் ஒரு திரிபு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்படியானால் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் கோருவார் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்படியானால் நாட்டின் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் மொட்டின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.
இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மொட்டு கட்சி சார்ந்திருந்த அரசாங்கத்தின் சுயேச்சைக் குழுவினரோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக, மொட்டு அணியைச் சேர்ந்த பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். பீரிஸ், சஞ்சீவ எதிரிமான்ன, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டதாகவும், சுயேச்சைக் குழுவின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் முன்னைய கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இக்கலந்துரையாடலில் அது தேசிய ஒருமித்த அரசாங்கமாக மாற்றப்பட்டுள்ளது.
எந்தப் பெயரை உருவாக்கினாலும் அதற்கு மொட்டு கட்சியே தலைமை தாங்க வேண்டும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்தின் பிரதமர் யார் அல்லது அமைச்சர்கள் யார் என்பது குறித்தும் அதன் அமைப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் இதுவரை கலந்துரையாடப்படவில்லை எனத் தெரியவருகிறது.