பாராளுமன்றத்தை பஸ்களால் சுற்றி வளைக்க திட்டம்! நாட்டில் எங்கிருந்து போராட்டக்காரர்கள் வந்தாலும் பஸ்கள் இலவசம்!

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இலவச பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (03) தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பேருந்துகளை இலவசமாக வழங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.