இடைக்கால அரசில் 20 ஐ ஒழியுங்கள்! – மனோ இடித்துரைப்பு.

“இடைக்கால அரசு அமையுமானால், அதன் முதல் பணியாக 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் இந்த அரசை அகற்றுவோம். அதன்பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணைந்து, புதிய பிரதமரின் கீழ் ஆட்சி அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அமையும் அரசின் முதலாவது பணி, 20ஐ இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்கலாம்” – என்றார்.