சிங்களத் திரையுலகின் பிரபலமான வில்லன் நடிகர் வில்சன் கரு காலமானார்

கிருலப்பனையில் வாழ்ந்த சிங்களத் திரையுலகின் பிரபலமான வில்லன் நடிகரும், சண்டைக் காட்சிகளில் தனது திறமைகளை காட்டிய வில்சன் கரு நேற்று (2022.05.03) தனது 79ஆவது வயதில் காலமானார்!
சுமார் 250 சிங்களப் படங்களில் ஸ்டன்ட் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்துள்ள இவரை கிருலப்பனையில் வாழ்ந்தார்.
தமது அந்திம காலத்தில் மிகவும் நொடிந்துபோன நிலையில் காணப்பட்ட இவர் எப்போதும் அமைதியாகவே காணப்பட்டார்.
வில்சன் கரு கடைசியில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்!
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்