யாருக்கும் அடி பணிந்து பதவியிலிருந்து விலகமாட்டேன்! மஹிந்த திட்டவட்டம்!

எந்த அழுத்தங்களுக்கும் அடி பணிந்து தான் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்…..
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க தயார். அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலக போவதில்லை. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும், முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.