ரணிலும் , மைத்ரியும் ராஜபக்சக்களுக்கு ஆதரவானவர்கள் : சாணக்கியன் இராசமாணிக்கம் (Video)

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் மறைமுகமாக ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின் , பாராளுமன்றத்திற்குள் அரங்கேறும் நாடகத்தை அம்பலப்படுத்தி, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியானர்.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்திருக்கும் , ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) ஆதரிப்பதாக கூறியுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மறுபெயரிட்டமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் கடுமையாக சாடினார்.
“இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை வாக்கெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளது எனவும் , ஏனைய 148 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்சக்களுக்கு ஆதரவானவர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட எந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும், நாடகங்களை அரங்கேற்றுபவர்களும், திருடர்களும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.