மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்….

இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் நடவடிக்கை வரையறுக்கப்பட்ட அளவே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மோட்டார் சைக்கிளுக்காக 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 3,000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதோடு கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.