நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராக அலி சப்ரி…
நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராகவும் நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சராகவும் அலி சப்ரி செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அதன்படி பாராளுமன்றில் இன்று உரையாற்றிய ரவூப் ஹக்கீம், ஏற்கனவே எதிர்கட்சி கூறிய விடயங்களையே தற்போது அலி சப்ரி கூறுவதாக குறிப்பிட்டார்..
அவர், நாட்டின் பிரச்சினைக்கு தீர்வை அறிவிக்காமல், தொடர்ந்தும் வாக்குமூலத்தை வழங்கி வருவதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் ,இதேவேளை காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்படும் சத்தம் கேட்காமல் எத்தனை நாட்களுக்கு பதுங்கிக்குழிக்குள் இருக்கமுடியும் என்று ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.