மாவட்ட செயலக ஊழியர்களுக்கிடையிலான கரம் சுற்றுப் போட்டி!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த வாரம் இல்ல விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் நேற்றைய(04) போட்டியாக கரம் விளையாட்டு நடைபெற்றது.
இதில் அரியாத்தை, பண்டாரவன்னியன், முல்லைமணி இல்லங்களின் ஆண் பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.
இதில் ஆண்கள் பிரிவில் பண்டாரவன்னியன் இல்லமும், பெண்கள் பிரிவில் முல்லைமணி இல்லமும் சம்பியனானது.