சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ படத்தின் டிரைலர் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் வரும் மாதம் 13ஆம் தேதி திரயரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது. நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.