மதுரை ஆதீனம் சென்னைக்கு பல்லக்கிலா வருகிறார்? விமானத்தில்தானே வருகிறார்- ஆர்.எஸ்.பாரதி கேள்வி

மதுரை ஆதீனம் மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் பொழுது பல்லக்கிலா வருகிறார்?விமானத்தில் தானே வருகிறார்?

தருமபுரம் ஆதினம் விவகாரம் குறித்து தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதின விவகாரம் தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடுக்கு சிறப்பு பேட்டியளித்த அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, ‘500 வருடங்களுக்கு முன்பாக ஆதீனங்கள் பல்லக்கில் போனதாக கூறுகிறார்கள். ஆனால், 500 வருடத்திற்கு முன்பாக ஆதினங்கள் காரில் போனார்களா? அவர்கள் அறையில் ஏசி இருந்ததா? செல்போன் பயன்படுத்தினார்களா?

அந்தவகையில் இதை கருத்தாக தான் எடுத்து வைக்கிறோம்.

மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது. மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது.

மனிதனை மனிதன் இழுக்க கூடாது. இதே போன்ற பிரச்சனை பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியார் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி நடந்தே சென்றார்.

எனவே பல்லக்கில் செல்ல கூடாது என்ற நிலைப்பாட்டை மடாதிபதிகளே எடுத்தால் மிகவும் வரவேற்கக் கூடிய ஒன்று.

மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை வரும் பொழுது பல்லகிலா வருகிறார்? இல்லை நடந்து வருகிறாரா?

விமானத்தில்தானே வருகிறார். இது ஒரு முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஆதீனம் வேண்டாம் என்று சொல்லவில்லை. கோவிலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. இது ஒரு பரிந்துரையாக கூறப்பட்டுள்ளது. ஏற்றுக்கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும். இல்லை என்றால் முதலமைச்சர் முடிவெடுப்பார்.

குறிப்பாக இது என் தனிப்பட்ட கருத்தே தவிர அரசின் கருத்து அல்ல’ என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.