சாணக்கியன் எம்.பியே ராஜபக்சக்களுடன் ‘டீல்’ – சபையில் ரணில் பதிலடி.
“இராசமாணிக்கம் சாணக்கியனுக்குத்தான் ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்தத் தொடர்பும் இல்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு இன்று சபையில் பதிலடி கொடுத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.
சபையில் இன்று உரையாற்றிய ரணில் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“ராஜபக்சக்களுக்காக நான் செயற்படுவதாக இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார். அது அப்பட்டமான பொய். அவருக்குத்தான் ராஜபக்சக்களுடன் தொடர்பு இருக்கின்றது.
ராஜபக்சக்களின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராகக்கூட சாணக்கியன் செயற்பட்டுள்ளார்.
மஹிந்த சரணாங் கச்சாமி, கோட்டா சரணாங் கச்சாமி எனப் பல்லவி பாடுவது சாணக்கியனின் வழமையாக இருக்கலாம். என்னைப் பற்றி தவறான கருத்தைப் பரப்ப வேண்டாம்” – என்றார்.