மஹிந்த பதவி விலக தீர்மானம்? நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் ?

சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, திங்கட்கிழமை (09) காலை அமைச்சரவை இராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (06) மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் திங்கள்கிழமை காலை பதவி விலக உள்ளனர்.
பாதுகாப்புச் சபையை நாளை சனிக்கிழமை (07) கூட்டுவதற்குத் தேவையான பல பாதுகாப்புத் தீர்மானங்களை எடுப்பதற்கும், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மக்கள் போராட்டங்கள் மேலும் வலுவடையும் பட்சத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை சந்திப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அரசாங்கத்தின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.