பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் – நாமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல்.
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிபிசியிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
போதிய வருமானம் இன்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார். உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பணத்தை மீள முதலீடு செய்யும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி நம்பியவாறு அது நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று ரூபாயை மிதக்குமாறு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை அரசாங்கம் ஏன் பின்பற்றவில்லை என ஊடகவியலாளர் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அவர், அதற்கு முடிவெடுப்பவர்களும் பொறுப்பு என்று கூறினார். அரசியல்வாதிகள் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தவறான அறிவுறுத்தல்களை வழங்கியதை தற்போதைய நிதியமைச்சர் அலி சப்ரியும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.