அவசரகால தடைச்சட்டம் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்.
அவசரகால தடைச்சட்டம் என்றால் என்ன?
அறிந்து கொள்ளுங்கள்.
எங்கேயும், எதற்காகவும் கைதுசெய்ய/ சுடப்படலாம் – அவசர கால தடைச் சட்டம் அமுல்!
(emergency act imposed island wide control violence alert)
அரசாங்கத்தால் அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன? என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும்.
இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!
இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 நேரமும் கடமையில் இருக்க வேண்டும்.
விடுமுறைகளை எடுக்க முடியாது
இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் காரணமின்றி கைது செய்யப்படலாம்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.
இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல்,, அதிக ஒலி எழுப்புதல் உட்பட
ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாறும்.
அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்
சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.
கைதுக்கு முன்னோ கைதுக்கோ பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.
அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.
விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.
மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்புப் பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும்
அனுமதி அளிக்கின்றது.
பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.
மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.
யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.
விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.
ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.