போராட்டத்தை ஒடுக்க இந்தியாவிருந்து நீர் பீச்சும் (water canon) பீரங்கி இறக்குமதி செய்யப்பட்டதா?
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்திய புத்தம் புதிய நீர் கேனன் (water canon) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாவனைக்காக வாகனம் கொண்டுவரப்பட்டதுடன், பின்னர் விசேட பாதுகாப்புடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் வாகனம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நீர் கேனான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நாட்டின் டாலர் நெருக்கடி மற்றும் இந்தியாவிடம் கடன் வாங்கும் சூழ்நிலையில், நாட்டு மக்களை அடக்குமுறைக்கு இதுபோன்ற பணத்தை செலவிடுவது சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பல பொறுப்பான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் விசாரிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விசேட பாதுகாப்பின் கீழ் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நீர் தாங்கி எடுத்துச் செல்லப்பட்டு கடந்த 6 ஆம் திகதி மாலை 4.55 மணியளவில் ஹம்பாந்தோட்டை நுழைவாயிலுக்குள் நுழைந்துள்ளது.