இருதார யோகம் யாருக்கு ஏற்படும் ?
*சந்திரனும் சனியும் 7ல் இருப்பின் முன்னொரு வருக்கு கல்யாணம் செய்யப்பட்ட பெண் இன்னொருவருக்கு வாழ்க்கை பட வேண்டி இருக்கும்.
* 7ம் பாவம் சந்திரன் சுக்கிரன் ராசியாகவோ வர்கங்கலாகவோ ஆகி அதற்குச் சந்திரன் சுக்கிரன் இவர்களுடைய சம்பந்தமோ.திருஷ்டியோ ஏற்படின் இருதாரம் ஏற்படும்.
*7ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் இருப்பின் தார தோசம் உண்டு.
* 7குடையவன் உச்சம் வக்கிரம் முதலிய காரணத்தால் இருதாரம் ஏற்படும் .
*லக்கினாதிபதி 8லிருந்து 7ல் பாப கிரகம் இருப்பின் இருதாரம் .
*7க்குடையவன் சனி செவ்வாய் ராகு இவர்களுடன் கூடினால் களத்திர தோசம்.
*7க்குடையவன் சுபனுடன் கூடி சத்ரு வீட்டிலோ நீச வீட்டிலோ இருந்து பாக
கிரகம் 7ல் இருந்தால் இரண்டு விவாகம் ஏற்படும் .
*களத்திர காரகன் பாபருடன் கூடினாலும் நீசராசி அம்ஸமேறி பாப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் இரண்டு விவாகம் ஏற்படும் .
*7 அல்லது 11ல் இரண்டு கிரஹங்கள் இருதாரம் அமையும்.
* 8குடையவன் லக்னத்திலோ 7லோ இருப்பின் தார தோசம்.
* லக்னாதிபதி 6மிடத்தில் இருப்பின் களத்திர தோச முண்டு
*2குடையவன் 6மிடத்திளிருந்து 7ல் பாபர் இருப்பின் களத்திர தோசமுண்டு .
* 7ல் அநேக பாபக் கிரகமிருன்டால் தோசமுண்டு
*செவ்வாய் சுக்கிரன் சனி 7ல் இருந்தும் லக்னாதிபதி 8ல் இருந்தாலும் தோசமுண்டு
திருமணம் ஆனவனர்கள் பெரும்பாலும் சிலருக்கு இந்த அமைப்பு வரும் இதை ஒப்பிட்டு பார்த்து பயப்புட வேண்டாம் ஏனென்றால் உங்க வாழ்க்கை துணைக்கும் இந்த அமைப்பு இருக்கும் இதனாலு பயப்பட தேவையில்லை.
அப்படி இல்லை என்றால் இருவரின் ஜாதகங்களை பார்த்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.
இந்த மாதிரஅ தோச அமைப்பு உள்ளவர்களுக்கு, இதே போல் தோசம் உள்ளவர்களை இல்லறத்தில் இணைப்பது சிறப்பு அதாவது மைனஸ்×மைனஸ்=பிளஸ்.
மேலும் இந்த மாதிரி தோச அமைப்பு உள்ளவர்களுக்கு திருமண தடையும் ஏற்படும் .