பிரதமர் மகிந்த , தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாயவை வழிபடுவதற்காக சென்று திரும்பிய பிரதமர், ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை அலரிமாளிகைக்கு வருகை தரவுள்ள ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் இதனை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேசமயம் பிரதமரின் மகனான நாமல் முன்னர் மகிந்த தெரிவித்த கருத்தொன்றை டியுட்டரில் பதவிட்டுள்ளார்.
அதில் தான் ஜனாதிபதியாகவும் , பிரதமராகவும் , பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவன்தான். இது ஒன்றும் பெரிய பதவியல்ல எனக்கு. எப்படியிருந்தாலும் நான் ராஜபக்சதான் என அவர் சொன்ன பதிவை, மீள் பதிவேற்றம் செய்துள்ளார்.
#MahindaRajapaksa pic.twitter.com/SQrz3vH4Mk
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 8, 2022