ஜனாதிபதி முறையை நீக்க தயார்..- கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையைத் தீர்ப்பதற்கான 13 அம்ச திட்டமொன்றை ஜனாதிபதியிடம் இன்று முன்வைத்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசமைப்புச் சட்டத்திற்கு அமைய அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.