அலரி மாளிகை முன்பு தற்போது கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் உடைத்து எறியப்படுவதுன், எரியூட்டப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலரி மாளிகை முன் திரண்ட அரசாங்கத்திற்கு குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களினால் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் காலிமுகத்திடல் நோக்கி செல்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.