ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு.

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானின் யோனாகுனி பகுதியில் இருந்து தென்மேற்கே 68 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 11.53 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் பகுதிக்கான நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.