கோட்டாகமவை தாக்க சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட கைதிகள் : கைதிகளே வாக்குமூலம் (வீடியோ)

புனர்வாழ்வளிக்கப்படவிருந்த கைதிகளை இன்று பிற்பகல் கோட்டகோகம போராட்ட வளாகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக வட்டரக்க சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லும் போது பொதுமக்களால் பிடிபட்ட போது இது தெரியவந்துள்ளது.
அவர்கள் முதலில் அலரிமாளிகையில் பிரதமரை முதலில் சந்தித்தனர் என தெரிவிக்கிறார்கள்.
வட்டரக்க சிறைச்சாலையின் ஜெயிலர் ராமநாயக்க என்ற நபரால் இவர்கள் அழைத்து வந்தவர்கள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் தன்னை கைதியாக அறிமுகம் செய்துகொள்ளும் நபர் ஒருவரால் இந்த வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ கீழே உள்ளது,