முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்க : சுமந்திரன்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் சுமந்திரன், தனது கட்சி உறுப்பினர்களை கொழும்புக்கு வரவழைத்து தாக்குதலொன்றுக்கு ஏற்பாடு செய்த முன்னாள் பிரதமரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் , தயவு செய்து அமைதியை பேணுங்கள். வன்முறையற்ற போராட்டமே மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தனை காலம் பேணிய சாத்வீக முறையை தொடருங்கள். வன்முறைக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Please desist from any form of violence. All that effort at keeping the ‘aragalaya’ non-violent will be lost if they turn this into a violent struggle. Please exercise restraint. Change will come! pic.twitter.com/JonHdY3PQ0
— M A Sumanthiran (@MASumanthiran) May 9, 2022