திருமலை கடற்படை முகாமுக்குள் மஹிந்த குடும்பம் தங்கவைப்பா? மக்கள் அணிதிரண்டு போராட்டம்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகம் முன்னால் இன்று ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்தே மக்கள் அங்கே கூடினர்.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிஹொப்டர் மூலம் மஹிந்த உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் இன்று காலை குறித்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் பரவின.
இதையடுத்து மஹிந்த குடும்பத்தினர் உள்ளே இருந்தால் வெளியே அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விடக் கூடாது என்றும் வலியுறுத்தி மக்கள் முகாமுக்கு முன்னால் அணிதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.