உடன் பதவி விலகுங்கள்! – கோட்டாவிடம் ஜே.வி.பி. இடித்துரைப்பு.

“நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வுகாண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும்.” இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும், அக்காலப்பகுதிக்கு வேண்டுமானால் இடைக்கால அரசொன்றை நிறுவலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.