சஜித் , எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் நிலை?
புதிய இடைக்கால அரசாங்கம் பதவியேற்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளது.
இந்நிலைமையால் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகலாம் என தெரிய வருகிறது.
இதன்படி, புதிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.
சஜித் பிரேமதாசவை பாராளுமன்றத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் கோரிய போதிலும், பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனைத் தவிர்த்து வந்தார்.
இதனால் கட்சிக்குள்ளும் அவர் மேல் அதிருப்தி ஏற்பட்டு , சிலர் அவரது கட்சியை விட்டு சுயாதீனமாகவும் அமைக்கப்படும் இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்கவும் போவதாக தெரிகிறது.