மஹிந்த , நாமல் , ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை (பிந்திய இணைப்பு)
முன்னாள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்ணாந்து ஆகியோருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
பிந்திய இணைப்பு
மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.