இன்று சர்வதேச செவிலியர் தினம்.
கொரோனாவை எதிர்கொள்வதில் இவர்களின் மகத்தான பங்கு குறித்து தெரிந்துகொள்ளுங்கள் மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் இந்த தேவதைகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மே 12ஆம் தேதியன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் இந்த தேவதைகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராகக் கருதப்படும் ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் அவர்களின் பிறந்தநாள் அன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
2022ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தில் , “தலைமைக்கான ஓர் குரல் – சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கு செவிலியர் பணியில் முதலீடு மற்றும் மரியாதைக்குரிய உரிமைகள்’’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் ஹீரோவாக செயல்பட்ட மருத்துவர்களைப் போலவே இன்றியமையாத சேவைகளை செய்தவர்கள் இந்த செவிலியர்கள் ஆவர்.
கொரோனா பெருந்தொற்றை மானுட குலம் எதிர்கொள்வதில் செவிலியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூருவதற்கு இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த அல்லது அருகாமையில் உள்ள செவிலியர்களுக்கு இந்த நாளில் சிறு வாழ்த்து கூறுவதன் மூலமாக அவர்களது சேவைகளை நீங்கள் கௌரவிக்கலாம்.