பிரதமர் ரணிலுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளோம்: அமெரிக்கத் தூதுவர் ஜூலி.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். பிரதமராக அவர் நியமனம், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் விரைவான உருவாக்கம் ஆகியவை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும்.
அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் IMF மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமெரிக்க தூதர் ட்வீட் செய்துள்ளார்.