ஜனநாயக ரீதியாக ரணிலை பிரதமராக்கியது போல் ரணிலை வீட்டுக்கும் அனுப்புவோம் : சுமந்திரன்
மக்கள் ஆதவு இல்லா ஜனாதிபதி ,மக்கள் ஆதரவே இல்லாத ஒருவரை பிரதமராக்கியுள்ளார். 2018ல் ஜனநாயக ரீதியாக ரணிலை பிரதமராக்கியது போல் இம்முறையும் ஜனநாயக ரீதியாக ரணிலை வீட்டுக்கு அனுப்புவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைப்பாட்டை எம்.ஏ. சுமந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று கோத்தபாய ராஜபக்ச தனது ஆணையை இழந்த ஜனாதிபதி எனவும், அவ்வாறான ஆணையை இழந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
ரணில் குறைந்த பட்சம் கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு கூட வர முடியாத நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற 52 நாள் சதியில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க வேண்டுமென்று போராடியது போன்று இம்முறை ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப ஜனநாயக ரீதியாக போராடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.