தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்…

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிச்சை தொடக்கம் காங்கேசன் வரையிலான ரயில் சேவையும் கோட்டை முதல் பதுளை வரையிலான ரயில் சேவையும் மருதானை முதல் பெலியத்த வரையிலான ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,ரயில் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1971 எனும் இலக்கத்தை ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.