பணம் அச்சிடாமல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது : ரணில்
ஏற்கனவே அச்சிடப்பட்ட மூன்று இலட்சம் கோடி ரூபா பணம் தீர்ந்து விட்டதாகவும், தற்போது அரசாங்கத்திடம் 100 பில்லியன் ரூபா மாத்திரமே இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே அதிக பணம் அச்சிடுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவை எனவும், இல்லையெனில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது பொருளாதாரக் கொள்கையானது பணத்தை அச்சிடுவதல்ல எனவும், தற்போது பணம் அச்சிடப்படாவிட்டால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.