நாட்டில் ஏற்பட்ட கலவர நிலையில் 2,000 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்..!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு கடந்த 09 ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தந்த பேருந்துகளில் சுமார் 40 பஸ்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிடையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைக்கையிலெயே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என இவ்வாறு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என பொலிpஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 09 ஆம் திகதி தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பிலும் அறிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் தொடர்பில் CCTV காணொளிகள் காணப்படுமாயின் அதனை பொலிசாருக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.