பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது ரோஹினிக்கு சுயாதீனக் கூட்டணி ஆதரவு.

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
இதன்போது ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்குப் பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், அந்தப் பதவிக்கு அஜித் ராஜபக்சவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு 11 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.