நிதியமைச்சர் பதவி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு?

புதிய அமைச்சரவையின் பிரதான பொறுப்பான நிதியமைச்சர் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய அரசாங்கத்தின் கீழ் அதனை ஏற்க மறுத்ததாலும், பொருளாதாரம் தொடர்பான திட்டங்களைக் கொண்டபொருளாதார நிபுணரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசியல் கொள்ககைளின் அடிப்படையில் மறுத்ததாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சர் பதவியை தமக்கு வழங்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அப்பதவியை வழங்குவதாக ஜனாதிபதி பொஹொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.