பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணும் சவாலை ஏற்றுக்கொண்டமைக்காக பிரதமருக்கு சம்பிக்க பாராட்டு.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணும் சவாலை ஏற்றுக்கொண்டமைக்காக பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பலஅரசியல் தலைவர்கள் தமது பொறுப்பிலிருந்து பின்வாங்கியவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணும் சவாலை ஏற்றுக்கொண்டமைக்காக பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் தேர்தல்களை நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் அது இந்த தருணத்தில் சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவணக்க அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கம் அமைந்தால் அதற்கு ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி எப்போது பதவி விலக திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து பிரதமர் அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ள சம்பிக்க ரணவக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அதனை மதிப்பிட்ட பின்னரே இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.