ரணில் வெட்கக்கேடான ஒரு பிறவி ! – ரணிலை கழுவி ஊத்திய சுமந்திரன்! (வீடியோ)

எதிர்க்கட்சிகளின் பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பிரதமரின் நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று கடுமையாக சாடியுள்ளார். தீர்மானத்தை தோற்கடிக்க பிரதமர் வாக்களித்தமை வெட்கக்கேடானது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியை யார் பாதுகாப்பது என்பது முழு நாட்டுக்கும் தெரியும். உண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தை வெட்கக்கேடானது. ஆனால் நான் பிரதமருக்கு சொல்கிறேன்.ஜனாதிபதிக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவு செய்யப்பட்ட போது, எதிர்க்கட்சியிலிருந்த ரணில் அதைப் பார்க்க விரும்பினார்.
அந்த சம்பவம் குறித்து மேலும் உரையாற்றிய சுமந்திரன், பிரேரணைக்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததாகவும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவர் இதற்கு எதிராக வாக்களித்தமையினால் இன்று இந்த கருத்தை வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விளையாடும் விளையாட்டு என்ன என சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
அப்போதும் இன்றும் மாறிய ஒரே விஷயம் அவர் பிரதமர் ஆனதுதான்.
பிரதமரின் நடத்தையை விமர்சித்த அவர், அவர் பகிரங்கமாக கூறிய கொள்கையை நாட்டுக்கு விற்று விட்டார் என்றும் கூறினார்.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணையை தோற்கடிப்பதற்கும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவசர அவசரமாக விவாதிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் வாக்களித்தார்.