‘கோட்டா கோ கம’வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நாளான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றது.
13 வருடங்களின் பின்னர் கொழும்பில் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று பகிரங்கமாக நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கோட்டா கோ கம’வில் இன்று முற்பகல் வேளையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மத குருமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வழங்கப்பட்டது.