முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கோட்டாவின் கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று மாலையும் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கோட்டா கோ கம’வில் நேற்று காலையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலில் நேற்று மாலை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றல் நிகழ்வு நடைபெற்றது. One Galle Face Hotel முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாதையுடன் இறந்தவர்களுக்கு நீதி கோரி பேரணியை ஆரம்பித்தனர்.
இந்தப் பேரணி காலிமுகத்திடல் போராட்டத்தின் மத்திய இடமான ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நிறைவுபெற்றது.