கண்டி மாநகர சபை ‘மொட்டு’ உறுப்பினரின் இல்லத்தில் 35 பவுண் தங்க நகைகள் மாயம்.
கண்டி மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்குத் தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல்போயுள்ளன என்று அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கண்டியில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ கிளை கடந்த 9ஆம் திகதி தாக்கப்பட்டது. இதையடுத்து கண்டி போகம்பறைப் பிரதேசத்திலுள்ள கண்டி மாநகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடும் தாக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து மேற்படி வீட்டிலிருந்த 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா ரொக்கப் பணம் உட்பட இன்னும் பெறுமதியான பல பொருட்கள் காணாமல்போயுள்ளன என்று அவரது மனைவி கே.ஜீ ரேனுகா தர்மவங்ச, கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.